அச்சம் விடுங்கள்; அறிவைத் தேடுங்கள் !

300 இராமாயணங்கள் - ராமன் எத்தனை ராமனடி. . . . ?




300 இராமாயணங்கள் - ராமன் எத்தனை ராமனடி. . . . ? 
------------------------------------------------------------------------------------
இராமகாதை தொடர்பாக இந்தியாவிலும் கடல்கடந்த நாடுகளிலும் வழங்கி வரும் இராமாயணங்கள். இராமனும் சீதையும் உடன் பிறந்தோர் என்றும் சீதை இராவணனின் மகள் என்றும் தீய மந்தரையாகி வந்தவள் சரஸ்வதி என்றும் அனுமன் இராமனின் மகன் என்றும் எத்தனை எத்தனைக் கோலங்களைப் பூண்கின்றது இராமகாதை!

ஒன்றா? இரண்டா? முன்னூறு இராமாயணங்கள் இருக்கின்றன.. அதுவும் அன்னமேசி, பாலினேசி, பெங்காலி, கம்போடியன், சைனீஸ், குஜராத்தி, ஜாவனிஸ், கன்னடம், காஷ்மீரி, கோட்டனேசி, மலேசியன், மராத்தி, ஒரியா, பிராகிருதம், சமஸ்கிருதம், சாந்தலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபேத்தியன் என இத்தனை மொழிகளில்.

முன்னூறு விதமாகப் பேசவும் எழுதவும் பட்டிருக்கிறது என இராமாயணங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டிருக்கிறார் காமில் பல்கே என்ற அறிஞர். அவற்றில் சில.

1. வால்மீகி இராமாயணம் வடமொழி
2. கம்ப இராமாயணம் - தமிழ்
3. ஒட்டர் கூத்தர் இராமாயணம் -தமிழ்
4. துளசி இராமாயணம் இந்தி
5. எழுத்தச்சர் இராமாயணம் மலையாளம்
6. மாதவ் கங்குனி இராமாயணம் அசாம்
7. பலராம்தாசு இராமாயணம் ஒரியா
8. வசிஷ்ட இராமாயணம் வடமொழி
9. அத்யாத்ம இராமாயணம் வடமொழி
10. அற்புத இராமாயணம்
11. ஆனந்த இராமாயணம்( வால்மீகி )
12. சமண இராமாயணம்
13. பௌத்த இராமாயணம்
14. அகத்தியர் இராமாயணம் வடமொழி
15. வியாசர் இராமாயணம் வடமொழி
16. குமார வால்மீகி புலவர் எழுதியுள்ள கன்னட இராமாயணம்
17. குணபத்திரரின் கன்னட இராமாயணம்
18. புசுண்டி இராமாயணம்
19. உத்தர இராமாயணம் சமணம்
20. துன் ஹவொங் என்னும் பெயருடைய திபேத்திய இராமாயணம்
21. மவுட்கலிய இராமாயணம்
22. தக்க ராமாயணம்
23. குயில் ராமாயணம்
24. இராமாயண அகவல்
25. கோகில இராமாயணம்
26. அமர்த இராமாயணம், 
27. இராமாயணக் கீர்த்தைகள் 
27. பால இராமாயணம்

பௌத்தர்களின் இராமாயண நூல்களின்படி (ஜாதகக் கதைகள், தசரத ஜாதகம்) இராமனின் தந்தையான தசரதனின் தலைநகர் வாரணாசியாகும் (காசி). இராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள் ஆவர். அவர்கள் வனவாசமாகச் செல்லும் காடு இமயமலைச் சாரலேயாகும்.

வனவாசமே பன்னிரண்டு ஆண்டுகள்
எனப்படுகின்றது

உறவு முறைகளில் வெவ்வேறாக முரண்படுகின்ற கதைகள் உண்டு. 

பௌத்த இராமாயணம்
- இராமனையும் சீதையையும் அண்ணன் – தங்கையாக சித்தரிக்கிறது. சமணர்களோ தங்களின் இராமாயணத்தில் இராவணனின் மகள் சீதை என்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர் கள் எனப்படும்
தம்பூரி தாஸையாக்கள், கன்னட மொழியில் மேடைகளில் கதா கலாட்சேபங்களாக நடத்துகின்ற இராமாயணங்களிலும் சீதையை இராவணனின் மகள் என்றே பாடுகிறார்கள். தம்பூரி தாஸையாக்கள் இராவணனை "ரவுலா" என்று அழைக்கின்றனர்.

‘ராமகியென்’
எனப்படும் தாய்லாந்து இராமாயணத்தில் அனுமனை பெண் பித்தனாகக் காட்டுகின்றார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் அடுத்தவன் மனைவியை கள்ளத்தனமாக ரசிப் பவன், பிற வீடுகளின் படுக்கை அறைகளை எட்டிப் பார்ப்பவன் என அனுமன் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இராம பக்தன் என்றெல்லாம் அதில் இல்லை. வெறும் தூதுவன் என்றே சொல்லப்பட்டிருக்கின்றான்.

தாய்லாந்து இராமாயணம்
- இ ராமனை சந்தேக புத்தி கொண்ட ஒரு கொலைகாரனாகச் சித்தரிக்கிறது. வனவாசத்துக்குப் பிறகு சந்தேகம் கொண்டு சீதையை விரட்டிய இராமன், காட்டுக்குள் வைத்து அவளைக் கொன்று விடும்படி இலட்சுமணனுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றான். இலட்சுமணனோ ஒரு மானைக் கொன்று விட்டு, அதன் இதயத்தை சீதையின் இதயம் என்று இராமனிடம் காண்பிக்கிறான்.

சாந்தலர்களின் இராமாயணத்தில்
- இலட்சுமணன், இராவணன் இருவருமே சீதையை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்புக்கள் இருக்கிறது.

சடகந்த இராவணா என்னும் தமிழ்க்கதை
- சீதை இராவணனைக் குத்திக் கொல்கிறாள் எனக் கூறுகிறது .

விமலசூரியின் ஜெயின் இராமாயணமோ
- இராவணனைக் கொல்வது இராமன் அல்ல.. இலட்சு மணன் என்கிறது.

ஆந்திராவில், ரங்கநாயகி அம்மாள் தொகுத்திருக்கும்
இராமாயணக் கதைகளை தங்கள் வீட்டுக் கொல்லைகளில் அமர்ந்து கொண்டு பாடுகின்ற பிராமணப் பெண்களுக்கு, சீதையைப் பற் றிய கவலையே மிகுந்து காணப்படுகிறது. ராமனையே விஞ்சு கிறாள் என்று சீதையை உயர்த்திப் பிடிக்கின்றனர்.

ஜைன இராமாயணம்
- என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் 

தசரதனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயீ, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோலவே, லட்சுமணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டாளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. 

பௌத்த இராமாயணம் 
(கதையே முழுமையாக மாறிவிட்டது)
பௌத்த இராமாயணத்திலும், தசரதராஜனுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு இராமன், இலட்சுமணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்குப் பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் இராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் இராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், இராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்று சொன்னதால், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு இராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் இராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய இராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப் பட்டிருக்கின்றது.

பார்க்கவ புராணத்தில் - இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று இராவணனுக்கு ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் இராவணன் இராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே இராவணன் இராமனால் கொல்லப்பட்டதாகவும், இராவணனுக்கு உண்மையில் இராமன் தன் தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்கமாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ஆம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.

மவுட்கலிய ராமாயணத்தில் - மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை இராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து இராமனுக்குக் கொடுத்ததாகவும், இராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது இராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய இராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

சமணர்களும், தாய்லாந்து நாட்டினரும் இராவணனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். உயர்ந்த குணாளனாகச் சொல்கின்றனர். போர்க்களம் மற்றும் யுத்தத்தை முன் னிறுத்தி வீர, தீர, சாகசங்கள் நிறைந்த கதையாகப் படைத்திருக் கின்றனர்.

எஸ்.நிகிந்தன்






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.