அச்சம் விடுங்கள்; அறிவைத் தேடுங்கள் !

ஏவாளும் பண்டோராவும்



ஆண்டவன் கட்டளையை மீறியவர் யூதரின் மறைப்படி பெண், கிரேக்க நம்பிக்கைப்படி ஆண்.

மனித குலம் முழுதையும் பாவக் குழியில் தள்ளியவள் பெண் ஏவாள்.


யூதர்களின் தோரா ( கிறிஸ்தவர்களின் பைபிள் ) சொல்கிறது உலகின் முதல் பெண் ஏவாள். கர்த்தரின் கட்டளையை மீறி, பழத்தை தான் உண்டதோடு கணவனையும்(ஆதாம்) உண்ணச் செய்து, இருவரும் பாவிகளானமையால் மனித குலம் முழுதையும் பாவக் குழியில் தள்ளியவள் .

கிரேக்கத் தொன்ம த்தின்படி முதல் பெண், பண்டோரா .சீயஸ் கடவுள் களிமண்ணால் அவளை உருவாக்கச்செய்து உயிரளித்தார். மாந்தர்களைத் தண்டிப்பதற்காக அவளிடம் ஒரு பெட்டியைத் தந்து உலகத்துக்கு அனுப்பினார். திறக்கக் கூடாது என்ற அவரது ஆணையைப் புறக்கணித்து மூடியைத் திறந்தான் பண்டோராவின் கணவன் . எல்லாவிதத் தீமைகளும் அதிலிருந்து வெளிக் கிளம்பி எங்கும் பரவின .

ஆங்கிலத்தில் பண்டோராவின் பெட்டி ( Pandora's Box ) என்ற சொற்றொடர் எதிர்பாராத மற்றும் கடும் தொல்லைகளின் ஊற்று எனப் பொருள்படும்.


                                                                                 எஸ்.நிகிந்தன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.