அச்சம் விடுங்கள்; அறிவைத் தேடுங்கள் !

2 Jun 2011

அம்பேத்கர் சிந்தனைத்துளிகள்


புத்தம், நீதி நூலை அடிப்படையாகக் கொண்டது. புத்தர் ஒரு வழிகாட்டியாக நடந்து கொண்டார். கடவுளாக அல்ல.

இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஜாதிகளும், மூடத்தனங்களும் இருந்துகொண்டிருக்கும் நாள்வரைக்கும் நாம் பிற நாடுகளின் முன்பாக தலை நிமிர்ந்து வாழ இயலாது.

தீண்டாமை, மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இது, அடிமைத்தனத்தைக் காட்டிலும் மிகவும் மோசமானது.


ஒரே பக்கத்தில் இரண்டு சிறகுகளை உடைய ஒரு பறவைக்கு எப்படிப் பறக்க இயலாதோ, அப்படியே விதிவிலக்கு அடங்கிய ஒரு மதத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கு முன்னேற்றம் முடியாது..

மலைக்கும், நதிக்கும், காற்றுக்கும், நீருக்கும், புத்தகங்களுக்கும்கூட பெண்பாலை முன்னிறுத்திப் பெருமை சேர்ப்பதாகப் பாசாங்கு செய்கின்றார்கள்.

இந்தியா \ பாகிஸ்தான் நட்புறவு ஒரு பகற்கனவாகும். இஸ்லாமின் கொள்கை \ வேறுபாடு \ பண்பாடு ஆகியவை வேறு எந்த ஒரு மத ஆதிக்கத்தின் கீழும் இருக்கக் கூடாது என்பதை வேறுவகையில் வெளிக்காட்டுவதுதான் பாகிஸ்தான் என்பது.

சீர்திருத்தக்காரர்களை இம்சிப்பதற்கும், சீர்திருத்த இயக்கங்களை ஒழிப்பதற்கும் வைதிகர்களுக்கு ஜாதி ஒரு ஏற்ற கருவியாக அமைந்துள்ளது.

வழிகளையும், முறைகளையும் நீங்கள் சரியாக அறிந்து கொள்ளாவிட்டால் உங்கள் முயற்சிகள் எல்லாம் வீணாவது நிச்சயம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.