------------------------------
சமபந்தர் வாழ்ந்த 7 ம் நூற்றாண்டில், மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப் பட்டனர். அந்த சமணர்கள் வேறு மொழி பேசிய, வேற்றின மக்கள் அல்லர். அவர்களும் தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தமிழர்கள் தான். அன்று மதுரையை ஆண்ட கூன் பாண்டியனும், திருஞான சம்பந்தரும், எண்ணாயிரம் தமிழர்களை, அவர்கள் சமண மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக இனவழிப்புச் செய்தனர். சமணர்களின் படுகொலைகளுக்கும், Holocaust எனும் யூத இனப் படுகொலைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? ஜெர்மனியில், ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட யூதர்களும் ஜேர்மனிய இனத்தவர்கள் தான். யூத மதத்தை பின்பற்றிய ஒரே காரணத்திற்காக தான், அவர்கள் படுகொலை செய்யப் பட்டனர். தமிழகத்தில், மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கொன்ற வரலாற்றை, சமண மத நூல்கள் எதுவும் பதிவு செய்யவில்லை. அதனால், "அப்படி ஒரு படுகொலை நடந்ததாக நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று, இன்று சில சைவ மத அடிப்படைவாதிகள் வாதாடலாம். ஒரு இனம் தனது மூதாதையருக்கு நடந்த இனப் படுகொலையை நினைவுகூரும் மரபு, யூதர்களிடம் இருந்து தான் ஆரம்பித்தது. ஆனால், உலகில் பொதுவாக, வேறெந்த இன மக்களும், தமக்கு நடந்த இனப் படுகொலைகளை நினைவுகூரும் மரபைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், பண்டைய காலத்தில் கொலையாளிகள் மட்டுமே, தாம் எத்தனை பேரை படுகொலை செய்தோம் என்பதை பெருமையாக நினைவுகூர்ந்து வந்தனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில், சமணர்களின் இனப்படுகொலை குறிப்பிடப் படுகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும், வேறு சில சைவ மத ஆலயங்களிலும், சமணப் படுகொலை பற்றிய சிற்பங்கள் செதுக்கப் பட்டுள்ளன. மதுரையில் "சாமநத்தம்" என்ற ஊரில், இறுதிக் கட்ட சமண இனவழிப்பு நடந்திருக்கலாம். சமணர்களின் இரத்தம் என்ற சொல் திரிபடைந்து, சாமநத்தம் என்ற பெயர் வந்திருக்கலாம். சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாறிய, கூன் பாண்டியன் ஆண்ட மதுரையில் தான், தமிழத்தின் கடைசி சமணர்கள் வாழ்ந்துள்ளனர். மதுரைக்கு வந்து தங்கிய, திருஞான சம்பந்தரின் சத்திரத்திற்கு சமணர்கள் நெருப்பு வைத்த போதிலும், தப்பி விட்டதாக சம்பந்த நாயனார் பற்றிய கதையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சம்பந்தர் சமணத் துறவிகளை, "அனல் வாதம், புனல் வாதம்" இரண்டிலும் வென்றதாகவும், அதற்கு தண்டனையாக கழுவேற்றம் நடந்ததாகவும்,
அந்தக் கதையில் இருந்து தெரிய வருகின்றது. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப் படுவதால், சமணர்களின் "பயங்கரவாத தாக்குதல்களுக்கு" பதிலடியாகவே அந்தப் படுகொலைகள் நடந்துள்ளதாக, பெரும்பான்மை சைவர்களின் பிரதிநிதியான சம்பந்தர் ஒரு "நியாயத்தை" கூற விளைகிறார். ஒரு சம்பந்தர், எண்ணாயிரம் சமணர்களையும் வாதிட்டு வென்றாலும், "தோல்வியுற்ற அத்தனை பேருக்கும் மரண தண்டனை வழங்குவது," ஒரு திட்டமிட்ட இனப் படுகொலை தான். நாஜிகளும் யூதர்களை அடைத்து வைத்து விஷவாயு கொடுத்து தான் கொன்றார்கள். 7 ம் நூற்றாண்டில் நடந்த படுகொலைக்குப் பின்னர், இன்று வரையில் ஒரு சமணர் கூட தமிழ் நாட்டில் தப்பிப் பிழைக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால், திருஞான சமபந்தர் ஒரு பாசிச இனப்படுகொளையாளி தான்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.